கொரோனா தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் ஏமாற்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் ஏமாற்றம்
அவினாசி
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி அவினாசி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் முகம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே அவினாசி கை காட்டிபுதூர் ராஜன்நகர் கமிட்டியார் காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர். இந்த நிலையில் 30 நபர்களுக்கு மட்டுமே மருந்து உள்ளது என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அரசுப்பள்ளியில் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார அலுவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் சம்பவ இடம் வந்து மருத்துவ அலுவலரிடம் கேட்ட போது தடுப்பூசி மருந்து குறைவாக வந்துள்ளதால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி அடுத்த முறை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறிய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story