தூத்துக்குடியில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


தூத்துக்குடியில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Sept 2021 6:10 PM IST (Updated: 26 Sept 2021 6:10 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது செய்யப்பட்டார்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜா. இவருடைய மகன் டால்வின் (வயது 35) . சம்பவத்தன்று இவர் 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்புணர்ச்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து டால்வினை கைது செய்தார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story