விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம் காய்கறி மார்க்கெட்டில் அதிக சுங்க கட்டணம் வசூலிப்பதை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்
தாராபுரம் காய்கறி மார்க்கெட்டில் அதிக சுங்க கட்டணம் வசூலிப்பதை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தாராபுரம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாராபுரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் சுங்க அதிகமாக வசூல் செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தாராபுரம் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் இருமடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாடினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி பெட்டி ஒன்றுக்கு ரூ.6 வசூலித்து வந்த நிலையில் தற்போது ரூ.10 சுங்க கட்டணம் வசூல் செய்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது போக மீதமுள்ள காய்கறிகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சுங்க கட்டணம் வசூல் செய்யும் குத்தகைதாரர்கள் விவசாயிகளை தரக்குறைவாக நடத்துவதுடன் காய்கறிச் சந்தையில் விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளுக்கு முறையான ரசீது வழங்கப்படுவதில்லை. விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை ரோட்டில் வைத்து விற்பனை செய்யக் கூடிய அவலநிலையை தள்ளப்பட்டுள்ளது. விளை பொருட்களை விற்பனை செய்ய தனியே இடம் ஒதுக்கித் தரவில்லை.
மேலும் மழைக்காலங்களில் விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருட்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்து விடுகிறது. தாராபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தாராபுரம் சப் கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
பேச்சுவார்த்தை
இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையாளர் சங்கர் முன்னிலையில் மற்றும் தாசில்தார் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுங்க வரியை முறைப்படுத்தி விவசாயிகள் விற்பனை செய்வதற்கு தனி இடம் அமைத்து தருவதாக தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
விவசாயிகளின் சுங்க வசூல் மறுப்பு போராட்டத்தினால் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story