வாணியம்பாடியில் நடந்த கொலை வழக்கில் பெண் கைது
வாணியம்பாடியில் நடந்த கொலை வழக்கில் பெண் கைது
வாணியம்பாடி
வாணியம்பாடியில் கடந்த 10&ந் தேதி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகியும், முன்னாள் கவுன்சிலருமான வசீம் அக்ரம் (வயது 42) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய டீல் இம்தியாஸ் உள்பட 16 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் டீல் இம்தியாஸ் உள்பட 7 பேரை 3 நாட்கள் போலீஸ் s£ரலில் விசாரிக்க கடந்த வெள்ளிக்கிழமையன்று கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது. அதன்படி அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று காலை 10 மணி அளவில் வாணியம்பாடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விநாயகமூர்த்தி உள்பட போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து வாணியம்பாடி, நியூ டவுன் ஜீவாநகரை சேர்ந்த டீல் இம்தியாசின் சகோதரி பர்வீன் வீடு முழுவதும் 2 மணிநேரம் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்பு டீல் இம்தியாஸ் சகோதரி பர்வீன் (42) என்பவரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதனால் மீண்டும் வாணியம்பாடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story