ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் மனைவியுடன் நாற்றுநட்ட கலெக்டர்
ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா, தனது மனைவியுடன் நாற்று நட்டார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே விவசாய நிலத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா, தனது மனைவியுடன் நாற்று நட்டார்.
தடுப்பூசி முகாம்
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தனது மனைவி ஷிவாலிகாவுக்கு 2&வது தவணை கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கலெக்டர் அமர்குஷ்வாஹா காரில் அழைத்து சென்றார்.
அப்போது ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் கிராமத்தில் சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் நெற்பயிர்கள் நட்டுக் கொண்டிருந்தனர் இதனை அந்தவழியாக சென்ற கலெக்டர் பார்த்ததும், காரை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறினார்.
நாற்றுநட்ட கலெக்டர்
காரை நிறுத்தியதும், கலெக்டர் அமர்குஷ்வாஹா காரைவிட்டு இறங்கி தனது மனைவி ஷிவாலிகாவையும் அழைத்துக்கொண்டு விவசாயிகள் நாற்று நட்டுக்கொண்டிருந்த விவசாய நிலத்துக்கு சென்று நாற்று நட்டுக்கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து அவர்களும் நாற்றுநட்டனர்.
இதனால் அங்கு ஏற்கனவே நாற்று நட்டுக்கொண்டிருந்த பெண்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அந்தவழியாக சென்றவர்களும் இதனை பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story