திருச்செந்தூரில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்


திருச்செந்தூரில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
x
தினத்தந்தி 26 Sept 2021 8:21 PM IST (Updated: 26 Sept 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்

திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார். கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, சமூக நல்லிணக்க பேரவை மாநில துணை செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்தை திறந்து வைத்தார். பின்னர் 2020&2021 ம் கல்வியாண்டில் திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ&மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணை செயலாளர் டிலைட்டா, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை திருச்செந்தூர் தொகுதி அமைப்பாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர் நன்றி கூறினார்.
சைவ வேளாளர் ஐக்கிய சங்கம்
திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 150&வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் வட்டார அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் அந்தந்த பள்ளிகளில் நடந்தது. பின்னர் திருச்செந்தூர் சன்னதி தெருவில் உள்ள லட்சுமி மஹாலில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு சைவ வேளாளர் சங்க தலைவர் தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர் மெய்கண்டமுத்து, சங்கப் பொருளாளர் ஞானசுந்தரம், தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உலகநாதன், சங்கர், தொழிலதிபர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் துணை செயலாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி ஷைனுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கம், 2&வது பரிசாக கொம்புத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவி பிரித்திக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3&வது பரிசாக திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ரீஜாக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கமும் வழங்கினார். மேலும் மூன்று பேருக்கும் பரிசு, சான்றிதழ், வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் போன்றவையும் வழங்கப்பட்டது.
முன்னதாக அமைச்சர், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வீ. சண்முகம் ஆகியோர் சங்க முன்னாள் தலைவர் மறைந்த சுப்பிரமணிய பிள்ளையின் திருவுருவ படத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், நகர பொறுப்பாளர் வாள் சுடலை, திருச்செந்தூர் எஸ்.ஏ.செந்தில்குமார், பொன்முருகேசன், நகர துணை செயலாளர் ஆனந்தராமச்சந்திரன், சைவ வேளாளர் ஐக்கிய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் சந்தனராஜ் நன்றி கூறினார்.

Next Story