ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6,085 பேர் போட்டி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 486 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 6,085 பேர் போட்டியிடுகின்றனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 486 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 6,085 பேர் போட்டியிடுகின்றனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனை, வாபஸ் பெறுதலுக்கு பிறகு 4 பதவிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி மொத்தம் உள்ள 13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 95 பேரில் 10 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 17 பேர் வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் பட்டியல்படி 68 பேர் போட்டியிடுகின்றனர். 127 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 684 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில் 11 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 165 பேர் வாபஸ் பெற்றனர். 508 பேர் போட்டியிடுகின்றனர்.
6,085 பேர் போட்டி
288 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட 1247 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 27 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 319 பேர் வாபஸ் பெற்றனர். 22 பேர் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதி வேட்பாளர் பட்டியல்படி 879 பேர் போட்டியிடுகின்றனர். 2,220 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 5,625 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் 43 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 488 பேர் வாபஸ் பெற்றனர். 464 பேர் போட்டியின்றி ஊராட்சி வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதி வேட்பாளர் பட்டியல்படி 4,630 பேர் போட்டியிடுகின்றனர்.
மொத்தமுள்ள 2,648 பதவிகளுக்கு 7,651 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 96 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 989 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். 486 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 6,085 பேர் போட்டியிடுகின்றனர்.
Related Tags :
Next Story