86 பேருக்கு கொரோனா


86 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Sept 2021 9:27 PM IST (Updated: 26 Sept 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
86 பேருக்கு கொரோனா 
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 1,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
திருப்பூர் மாவட்டத்தில்  86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
பலி இல்லை 
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 670 ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 96 பேர் நேற்று குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 773 ஆக உள்ளது. 
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 944 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கொரோனா பலி இருந்து வந்தது. ஆனால் நேற்று யாரும் இறக்கவில்லை. இதனால் பலி எண்ணிக்கை 953 ஆக உள்ளது. கொரோனா தொற்று முழுவதும் கட்டுக்குள் வராமல் இருப்பதால் அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 


Next Story