பாலாற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்


பாலாற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்
x
தினத்தந்தி 26 Sept 2021 10:07 PM IST (Updated: 26 Sept 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் பாலாற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடியு ம் கிடைக்காததால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

காட்பாடி

வேலூர் பாலாற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் தேடியு
ம் கிடைக்காததால், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

அண்ணன், தம்பி

வேலூர் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டு காளியம்மன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன்கள் முபாரக் (வயது18) . ஜாகிர் (17). இருவரும் காட்பாடியில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் வேலை செய்து வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 11.30 மணிக்கு இரண்டு பேரும் தண்டல கிருஷ்ணாபுரம் பகுதியில் பாலாற்றில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது பாலாற்றில் ஆழமான பகுதிக்கு ஜாகிர் சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி கூச்சலிட்டார்.

இதனைக்கண்ட அவரது அண்ணன் முபாரக் அவரை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்தார். இவருக்கும் நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து வேலூர் வடக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறை மற்றும் காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்

காட்பாடி தீயணைப்புத்துறையினர் நிலை அலுவலர் பால்பாண்டி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மூழ்கிய சகோதரர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சனிக்கிழமை இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் அதிகளவில் வெள்ளப்பெருக்கு இருந்தது. இதன் காரணமாக நீண்ட தூரத்திற்கு சகோதரர்கள் இருவரும் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. 

நேற்று மாலை வரை தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். வெளிச்சம் குறைந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் இன்று (திங்கட்கிழமை) அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்து அண்ணன்&தம்பியை தேடும் பணியில் ஈடுபட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலாற்றில் குளிக்கச் சென்ற அண்ணன் தம்பி இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story