தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
ஆபத்தான நிலையில் தொங்கும் மரக்கிளை
அம்மையநாயக்கனூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் உள்ள மரத்தில் ஒரு கிளை முறிந்து ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவர்கள், பொதுமக்கள் மீது அந்த மரக்கிளை விழுந்தால் அவர்கள் படுகாயமடைந்து உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மரக்கிளையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபிக்ஷா, அம்மையநாயக்கனூர்.
தெருவில் வீணாக செல்லும் குடிநீர்
கம்பம் 27-வது வார்டு பார்க் ரோடு 5-வது தெருவில் வாரம் இருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் நள்ளிரவில் தண்ணீர் வினியோகிக்கப்படுவதால் இரவு முழுவதும் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக தெருவில் செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலஸ்ரீனிவாசன், கம்பம்.
சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
நிலக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையில் புதுப்பட்டி பிரிவு பகுதியில் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாய்ரெங்கேஷ், நிலக்கோட்டை.
தார்சாலை அமைக்க வேண்டும்
தேனியை அடுத்த வீரபாண்டி மேலத்தெரு காட்டுகாளியம்மன் கோவில் பின்புறம் சாலை வசதி செயயப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அழகர்சாமி, வீரபாண்டி.
சேதமடைந்து வரும் மின்கம்பம்
கன்னிவாடி அருகே உள்ள பொன்னிமாந்துறை ஊராட்சி டி.புதூர் சிந்தலகுண்டு கிராமத்தில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து வருகின்றன. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை நட்டு வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிஷோர், சிந்தலக்குண்டு.
பயன்படாமல் உள்ள ஆழ்துளை கிணறு
நிலக்கோட்டை பேரூராட்சி 15-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பழுதால் 2 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ளது. மின்மோட்டாரை சரிசெய்து ஆழ்துளை கிணறை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், நிலக்கோட்டை.
Related Tags :
Next Story