வேலூர் மாவட்டத்தில் 95 ரவுடிகள் கைது


வேலூர் மாவட்டத்தில் 95 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 26 Sept 2021 10:51 PM IST (Updated: 26 Sept 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 95 ரவுடிகள் கைது

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் ரவுடிகளை கைது செய்யும்படி வேலூர் சரக டி.ஐ.ஜி.பாபு உத்தரவிட்டார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 23&ந் தேதி நேற்று முன்தினம் வரை 3 நாட்களாக போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். 

மேலும் வாகன தணிக்கை, ரோந்துப்பணி மற்றும் குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வழிப்பறி, திருட்டு, அடிதடி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த ரவுடிகள், வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர்கள் என 95 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பழைய குற்றவாளிகள் பலரிடம் நன்னடத்தை உறுதிமொழி சான்று பெறப்பட்டு விடுவிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story