நீர்வரத்து கால்வாய்களை சேதப்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை


நீர்வரத்து கால்வாய்களை சேதப்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Sept 2021 10:55 PM IST (Updated: 26 Sept 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து கால்வாய்களை சேதப்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை

வேலூர்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதையொட்டி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கவும், வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியது. 

அதன்பேரில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், கானாறு, சிமெண்டால் ஆன நீர்வடிகால், கல்வெட்டு ஆகியவற்றை தூர்வாரும்படி கலெக்டர் உத்தரவிட்டார். 
அதைத்தொடர்ந்து கடந்த 20&ந் தேதி முதல் 25&ந் தேதி வரை தூர்வாரும் பணி நடைபெற்றது. வேலூர் மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய், கானாறு என்று 658.8 கிலோ மீட்டரில் 580.2 கிலோ மீட்டரும், 486 கிலோ மீட்டர் கல்வெட்டில் 434 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்டுள்ளது.

இதேபோன்று குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சிகளில் கழிவுநீர் கால்வாய், கானாறு, சிமெண்டால் ஆன நீர்வடிகால், கல்வெட்டு 85 சதவீதத்துக்கும் மேல் தூர்வாரப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை சேதப்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Next Story