பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திண்டுக்கல்லில் கஞ்சா விற்ற வழக்கில் கைதான பெண் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை அடுத்த பண்ணைப்பட்டி அருகே உள்ள சந்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செந்தில். அவருடைய மனைவி ரேவதி (வயது 38). இவர், கஞ்சா விற்ற வழக்கில் கடந்த மாதம் 26-ந்தேதி கன்னிவாடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோல் பழைய கன்னிவாடி சுரைக்காய்பட்டியை சேர்ந்த குருநாதன் (34) என்பவரை கடந்த மாதம் 28&ந்தேதி விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்ததாக செம்பட்டி போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேர் மீதும் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து கஞ்சா வியாபாரிகள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் விசாகனுக்கு, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் ரேவதி, குருநாதன் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story