வீட்டின் சுவர் இடிந்து தொழிலாளி காயம்
வீட்டின் சுவர் இடிந்து தொழிலாளி காயம்
ஆம்பூர்
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்தநிலையில் ஆம்பூரை அடுத்த சின்னவரிக்கம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அன்புராஜ் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் தொடர் மழையால் அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அன்புராஜ் காயமடைந்தார். மற்றவர்கள் காயமின்றி தப்பினர்.
அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுவர் இடிந்த போது வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சில பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story