விராலிமலை அருகே தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
விராலிமலை அருகே தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
விராலிமலை:
கர்ப்பிணி தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா வாணதிராயன்பட்டியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மனைவி கீர்த்தி (வயது 23). இருவருக்கும் திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. கீர்த்தி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கீர்த்தி, தனது தாய் கோகிலத்திற்கு செல்போனில் தொடர்பு கொண்டு உடல் நிலை சரியில்லை என கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கீர்த்தி தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து கீர்த்தியை பூபாலன் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து கோகிலம் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story