பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x
தினத்தந்தி 26 Sept 2021 11:54 PM IST (Updated: 26 Sept 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க மீன்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

ராமேசுவரம், 

பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 2-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க மீன்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

புயல் எச்சரிக்கை

ஒடிசாவில் இருந்து 440 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவில் இருந்து 330 மீட்டர் கிலோ மீட்டர் தொலைவிலும் வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னம் ஒன்று உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதனிடையே வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1&வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று இறக்கப்பட்டது. அதன்பிறகு 2-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 

மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையிலும் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் மழை பெய்யாமல் வானில் கருமேகம் கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் இன்று விசைப்படகு, நாட்டு படகில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.


Next Story