கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது
கோவிலாங்குளம் பகுதியில் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
கமுதி.
கோவிலாங்குளம் போலீஸ் சரகம் அரியமங்கலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல், தனிப்பிரிவு ஏட்டு அழகு ராஜா ஆகியோர் போலீசாருடன் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே 2 அடி நீளம் அரிவாளுடன் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அரியமங்கலத்தை சேர்ந்த நல்லு மகன் ராமு (வயது 49) என்பதும் ஏற்கனவே கொலை வழக்கில் தேடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கமுதி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆசாமியை 15 நாள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு முத்துலட்சுமி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story