போலி பட்டா தயாரித்து விற்றவர் கைது
தேவகோட்டையில் போலி பட்டா தயாரித்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தேவகோட்டை,
தேவகோட்டையில் போலி பட்டா தயாரித்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
போலி பட்டா
தேவகோட்டை திருப்பத்தூர் சாலை பகுதியை சேர்ந்தவர் செபஸ்தியான். இவருடைய மகன் ராஜுவினில்(வயது 26). இவர் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்தவர். இந்த நிலையில் ராஜுவினில் அந்த பகுதியை சேர்ந்த பெண்களிடம், தேவகோட்டை உதயாச்சி பகுதியில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலம் இருப்பதாகவும், பட்டா வாங்கி தருவதாக கூறி ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்தாக தெரிகிறது. பிறகு அரசு முத்திரையுடன் போலி பட்டா தயார் செய்து பெண்களிடம் கொடுத்து உள்ளார்.
அந்த பட்டாவை பெற்று கொண்ட அந்த பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை தேடி சென்றனர். பின்னர் அந்த பட்டாவுக்கான நிலம் வருவாய்த்துறை வசமும் குறிப்பிடப்படவில்லை. நிலமும் எங்கு இருக்கிறது என தெரியவில்லை. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை அந்த பெண்கள் உணர்ந்தனர். போலி பட்டா வழங்கியது குறித்து சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
கைது
இது பற்றி விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன் அந்த பட்டாக்களை வாங்கி ஆய்வு செய்தார். அதில் அது போலி பட்டா என தெரிய வந்தது. இது தொடர்பாக தேவகோட்டை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து ராஜுவினிலை கைது செய்தனர். கைதான அவர் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story