திருச்செங்கோட்டில் மது பதுக்கி விற்ற 4 பேர் கைது
திருச்செங்கோட்டில் மது பதுக்கி விற்ற 4 பேர் கைது
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது திருச்செங்கோடு மலையடிவாரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கண்ணன் (வயது 41) மற்றும் விசைத்தறி தொழிலாளி சுரேஷ்குமார் (39) ஆகியோர் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 14 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அருகே செங்கோடம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி முருகேசன் (57) மற்றும் கட்டிட தொழிலாளி கார்த்திக் (31) ஆகியோர் மது பதுக்கி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story