தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குப்பையை எரிப்பதால் சுகாதாரகேடு
காட்டுப்புதூரில் 800-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பையை ஊரின் நடுப்பகுதியில் போட்டு எரிக்கிறார்கள். அந்த இடத்தின் அருகே அம்மா மினி கிளினிக், கோவில் மற்றும் பஸ் நிறுத்தம் ஆகியவை உள்ளன. இதனால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டமும் இருக்கும். குப்பையை எரிப்பதால் சுகாதார கேடு ஏற்பட்டு, பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ஊரின் ஒதுக்குப்புறமாக குப்பையை எரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுக பெருமாள், காட்டுப்புதூர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
தோட்டியோடு அருகே நம்பிமலை சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கிறது. இந்த பகுதியில் உள்ள மவுனகுருசாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். சாலை மோசமாக இருப்பதால் பாதசாரிகளும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப.முருகன், தெங்கம்புதூர்.
ஓடை அமைக்க வேண்டும்
வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு கருப்புக்கோடு கிராமத்தில் குண்டு தெருவில் மழை பெய்யும் போது சாலையில் தண்ணீர் தேங்கி, செல்ல முடியாத அளவு மோசமாக உள்ளது. எனவே ஓடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அய்யன் பகவத், கருப்புக்கோடு.
சாலையின் அவல நிலை
இடைக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட மாலைக்கோடு பகுதியில் உள்ள சாலையை தான் படத்தில் பார்க்கிறீர்கள், அந்த அளவுக்கு சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து உள்ளன. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சாலையை சீரமைத்து தார் போடுவதற்க அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.-எஸ்.டோன், இடைக்கோடு.
கொசு தொல்லை
அழகப்பபுரம் அரசு ஆஸ்பத்திரி சாலையில் கால்வாய் செல்கிறது. அந்த கால்வாயை தனியார் ஒருவர் மூடியதால், தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகும் இடமாக அது மாறி விட்டது. கொசு தொல்லையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுதவிர மழை காலங்களில் கால்வாயில் இருந்து பாம்புகள் வருகிறது. எனவே கால்வாய் நீர் சீராக செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மைக்கேல் பாபுஜி, அழகப்பபுரம்.
ஆகாய தாமரை ஆக்கிரமித்த குளம்
தக்கலை பெருமாள் கோவில் ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரிக்கு எதிரே ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் நீரை அந்த பகுதி மக்கள் பாசனத்துக்கும், குளிக்கவும் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் தூர் வாராமல் விட்டதுடன், அதில் கழிவு நீரும் கலக்கிறது. மேலும் ஆகாய தாமரையும் குளத்தை ஆக்கிரமித்து வளர்ந்து நிற்கிறது. எனவே குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விக்னேஷ், தக்கலை.
கால்வாயை தூர்வார வேண்டும்
திக்கணங்கோடு திங்கள் சந்தை சாலையில் ஒரு கால்வாய் செல்கிறது. இதன் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வரும் மது பிரியர்கள் கால்வாய் பகுதிக்கு வந்து அமர்ந்து குடித்து விட்டு மது பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை கால்வாயில் வீசி செல்கிறார்கள். இதனால் கால்வாயில் மது பாட்டில்களும், பிளாஸ்டிக் கப்புகளுமாக உள்ளது. எனவே கால்வாயை தூர்வாரி அதில் கிடக்கும் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுபாஷ் சந்திரபோஸ், சாஸ்தான்கரை.
Related Tags :
Next Story