பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு- போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தகவல்


பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு-  போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தகவல்
x
தினத்தந்தி 27 Sept 2021 1:24 AM IST (Updated: 27 Sept 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.

நெல்லை:
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று நெல்லையில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
இதனையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நெல்லை ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி பேசினார். 

கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

அப்போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நடுநிலை வாக்குச்சாவடி, முக்கிய வாக்குச்சாவடி, மிக முக்கிய வாக்குச்சாவடி என பிரித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பிரச்சினைக்குரிய பகுதிகளில் நிலவரங்களை கண்டறிந்து பிரச்சினைகளை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பேசினார்.
இதில் உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story