வனத்துறை விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி


வனத்துறை விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 Sept 2021 1:31 AM IST (Updated: 27 Sept 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சியி்ல் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.

கடையம்:
75-வது ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டத்தில் வனத்துறை சார்பில் புலிகளுக்கான இந்தியா என்ற விழிப்புணர்வு பேரணி நெல்லையில் தமிழகத்தின் முதல் புலிகள் காப்பகமான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பஸ்நிலைய பகுதியில் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் செந்தில்குமார், களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா ஆகியோர் முன்னிலையில் அரும்புகள் அறக்கட்டளையின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது கலைக்குழுவினர் புலிகள் மற்றும் காடுகளின் அவசியம் குறித்து பாடல் மூலமாகவும், நாடகம் மூலமாகவும் நடித்து காட்டினர். இதனை அப்பகுதியினர் ஆர்வமுடன் பார்த்தனர். அதைத்தொடர்ந்து புலிகளை பாதுகாப்பது குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முண்டந்துறை வன அலுவலர் சரவணகுமார், அம்பை வன அலுவலர் கார்த்திகேயன் உள்பட வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story