மணல் கடத்திய 2 பேர் கைது; மாட்டு வண்டிகள் பறிமுதல்


மணல் கடத்திய 2 பேர் கைது; மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Sept 2021 1:47 AM IST (Updated: 27 Sept 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு, மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பருக்கல் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் கிராம உதவியாளர் சீத்தாராமன் ஆகியோருக்கு சுத்தமல்லி ஓடையில் மணல் திருடப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைடுத்து அவர்கள் அங்கு ஆய்வுக்கு சென்றபோது சுத்தமல்லி ஓடையில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாட்டு வண்டிகளை நிறுத்தி, அதில் வந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் உடையார்பாளையத்தை சேர்ந்த ஹரிகரன்(வயது 24), சேழங்குறிச்சியை சேர்ந்த வெங்கடேசன்(26) என்பது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Next Story