கோபி அருகே நூதன மோசடி போலி ரூ.2 ஆயிரத்தை கொடுத்து முதியவரை ஏமாற்றிய மர்ம நபர்


கோபி அருகே நூதன மோசடி போலி ரூ.2 ஆயிரத்தை கொடுத்து முதியவரை ஏமாற்றிய மர்ம நபர்
x
தினத்தந்தி 27 Sept 2021 3:04 AM IST (Updated: 27 Sept 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே போலி ரூ.2 ஆயிரத்தை கொடுத்து முதியவரை மர்ம நபர் ஏமாற்றினாா்.

கடத்தூர்
கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சித்தன் (வயது 72). கூலி தொழிலாளி. இவர் தன்னுடைய மகள் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள மருந்து கடைக்கு சித்தன் மருந்து வாங்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத ஒருவர் சித்தனிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டு உள்ளார். இதனால் தன்னிடம் சில்லரையாக இருந்த பணத்தை அந்த நபரிடம் கொடுத்துவிட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு மருந்து கடைக்கு சென்றார். கடையை சென்றடைந்ததும், அந்த நபர் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து மருந்து கேட்டு உள்ளார். அப்போது மருந்து கடைக்காரர், இந்த நோட்டு குழந்தைகள் வைத்து விளையாடும் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு என திருப்பி கொடுத்துவிட்டார். இதை கேட்டதும் சித்தன் அதிர்ச்சி அடைந்தார். 
மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை நூதனமாக போலி ரூபாய் நோட்டு கொடுத்து மர்ம நபர் தன்னை ஏமாற்றி விட்டாரே என்ற வருத்தத்தில் அவர் வீட்டுக்கு சென்றார்.


Next Story