ஜலகண்டாபுரம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


ஜலகண்டாபுரம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 27 Sept 2021 3:33 AM IST (Updated: 27 Sept 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

ஜலகண்டாபுரம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

மேச்சேரி:
ஜலகண்டாபுரம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
மாற்றுத்திறனாளி மாணவன்
ஜலகண்டாபுரம் அருகே உள்ள சவுரியூர் கரட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 
இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து மாணவன் வெளியே சென்றான். பின்னர் அவன் மதியம் வரை வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அவனை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.
குட்டையில் மூழ்கி பலி
இதனிடையே அந்த பகுதியில் உள்ள குட்டையில் பிணம் ஒன்று கிடப்பதாக தகவல் பரவியது. அதன்பேரில் செல்வம் அங்கு சென்று பார்த்தார். அப்போது மணிகண்டன் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து அவனது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மாணவன் எதற்காக குட்டைக்கு சென்றான்? அவன் குட்டையில் மூழ்கியது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குட்டையில் மூழ்கி மாற்றுத்திறனாளி மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story