மினிவேனில் கடத்த முயன்ற 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
சென்னையில் இருந்து மினிவேனில் கடத்த முயன்ற 700 கிலோ குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
திருவள்ளூர் மாவட்டத்தின் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், மீஞ்சூர் போலீசார் சென்னை-வண்டலூர் வெளிவட்ட சாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சென்னை நோக்கி அதிவேகமாக வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில், 54 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
700 கிலோ குட்கா பறிமுதல்
இதைத்தொடர்ந்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ குட்கா போதை பொருட்களுடன் மினி லாரியும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் மினி லாரி ஓட்டி வந்த சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த செய்யது (வயது 46), வெங்கட்ரெட்டி (43) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு 2 பேரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story