கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சென்னையில் 10 இடங்களில் நடந்தது
சென்னையில் 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடத்தப்பட்டது.
சென்னை,
சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெண்களுக்கான பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது என்பதை பிரபலப்படுத்தும் வகையில், சென்னை மாநகர போலீசாரும், மாநகராட்சியும் இணைந்து மாபெரும் சைக்கிள் பேரணியை நடத்தினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டிச்சென்றனர். பொதுமக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இன்னொரு சைக்கிள் பேரணி நடந்தது.
10 இடங்களில்...
சென்னையில் மெரினா காந்தி சிலை, அண்ணாநகர் 6-வது அவென்யூ, ராதாகிருஷ்ணன் சாலை டி.ஜி.பி. அலுவலகம், ரிப்பன் மாளிகை, பெசன்ட்நகர் ராஜாஜி பவன், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி உள்பட 10 இடங்களில் இருந்து இந்த சைக்கிள் பேரணி தொடங்கியது. பல்வேறு பகுதிகள் வழியாக சென்ற இந்த பேரணியில் 500 பேர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகர போலீசும், மாநகராட்சியும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன.

Related Tags :
Next Story