தூத்துக்குடி மாவட்டத்தில் 10 இடங்களில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் சாலைமறியல் 829 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 இடங்களில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் 829 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி உள்ளிட்ட 10 இடங்களில் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று நடந்த சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 829 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல்
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை கைவிடவேண்டும், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், மின்சார மசோதா 2020-ஐ கைவிட வேண்டும். பொது சொத்துக்களை விற்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அழைப்பின் பேரில் நேற்று நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி வ.உ.சி. சாலையில் உள்ள தபால் தந்தி அலுவலகம் முன்பு மத்திய தொழிற்சங்கத்தினர் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி. தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. ரசல், பொன்ராஜ், ஏ.ஐ.டி.யு.சி. பாலசிங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சுசீ ரவீந்திரன், முருகன், ஐ.என்.டி.யு.சி. ராஜகோபாலன், சந்திரசேகர், ஏ.ஐ.சி.சி.டி.யு. சிவராமன், சகாயம், எச்.எம்.எஸ். சத்யா, அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்ற 12 பெண்கள் உள்பட 107 பேரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு
கயத்தாறில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் மணி என்ற சுப்பையா, ஒன்றிய செயலாளர் சீனிபாண்டியன், மாவட்ட துணை தலைவர் மாரியப்பன், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார், விவசாய அணி செயலாளர் மாரியப்பன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் தனுஷ்கோடி நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜா, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி, எஸ்.டி. பிரிவுகளைச் சேர்ந்த தாசன், ஆனந்த், தி.மு.க. நிர்வாகி முகமது பைசல் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டோனி திலிப், பால், மற்றும் போலீசார் கைது செய்தனர்.
ஏரல்
ஏரல் காந்தி சிலை அருகில் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பு, தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் மாணவர் அமைப்பு, ஏரல் தாலுகா குழுக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடந்தது. விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், தாலுகா செயலாளர் சுப்புதுரை, மாவட்ட துணைச செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணாராவ், சி.ஐ.டி.யு. பெஸ்டி, மணவாளன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் உள்பட பலர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 62 பேரை ஏரல் போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் தபால் அலுவலகம் முன்பு நேற்று காலையில் சி.ஜ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.எப்., ஏ.சி.சி.டி.யு. தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. சங்கத்தை சேர்ந்த ஜோதி, கிருஷ்ணராஜ், யோவான், ராமர், முருகன், புவிராஜ், எல்.பி.எப். சங்கத்தை சேர்ந்த சுப்பையா, கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர், மாரிமுத்து, முத்துராஜ், ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் பிச்சையா, ஏ.சி.சி.டி.யூ. சங்கம் சண்முகப்பெருமாள், செல்வராஜ், தமிழ் விவசாயிகள் சங்கம் வேல்ச்சாமி, விவசாயிகள் சங்கம் ராமலிங்கம், கிருஷ்ணசாமி, வேலாயுதம் உள்பட 69 பேரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக பஸ்நிலையம் முன்பிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு தொழிற்சங்கத்தினரும், விவசாய சங்கத்தினரும் தபால் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
எட்டயபுரம்
இதேபோன்று எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், விவசாய சங்கம் நடராஜன், நல்லையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், கட்டுமான சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், கிருஷ்ணசாமி, சங்கரேஸ்வரி, சி.ஐ.டி.யு ராமர், ம ஏ.ஐ.டி.யு.சி செயலாளர் சேது, ஏ.ஐ.டி.யு.சி பாலமுருகன், எல்.பி.எப் சந்திரசேகர் ஏ.ஜ.சி.சி.டி.யு விக்ரம் வேலு உள்ளிட்ட 74 பேரை எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம்
சாத்தான்குளம் தபால் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் அப்பாதுரை தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க வட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் ஜேசு, ஐ.என்.டி.யு.சி. மத்திய சங்க தலைவர் முருகன், ஏ.ஐ.டி.யு.சி. செல்வராஜ், சி.ஐ.டி.சி. மாவட்ட துணைத்தலைவர் வின்சன்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள அரசு நூலகம் முன்பிருந்து கோஷங்களை எழுப்பியவாறு சென்ற தொழிற்சங்கத்தினர் தபால் அலுவலகம் முன்பு தரையில் உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 36 பேரை சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம் தேரடி திடல் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்ற தொழிற்சங்கத்தினரும், விவசாய சங்கத்தினரும் பாரத ஸ்டேட் வங்கி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகராஜ், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் அசோக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச்செயலாளர் காசி, ஏ.ஐ.டி.யூ.சி. ஒன்றிய செயலாளர் மகாராஜன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சரவணா முத்துவேல், மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் ஜவஹர், டி.ஒய்.எப்.ஐ. ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கலைச்செல்வி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அழகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
829 பேர் கைது
இதே போன்று கோவில்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட 191 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் மறியலில் ஈடுபட்ட 54 பேரும், திருச்செந்தூரில் 123 பேரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 203 பெண்கள் உள்பட 829 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கடம்பூர், தூத்துக்குடி சிவில் சப்ளை கார்ப்பரேசன் அலுவலகம் முன்பும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
---------------------
Related Tags :
Next Story