கோழிக்கொண்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
பல்லடம் பகுதியில் கோழிக்கொண்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பல்லடம்
பல்லடம் பகுதியில் கோழிக்கொண்டை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கோழிக்கொண்டை பூ
பல்லடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான கள்ளகிணறு ஆலூத்துப்பாளையம் இலவந்தி சித்தம்பலம் கரசமடை உள்ளிட்ட பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டைப் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அடுத்தமாதம் 14 15 ந் தேதிகளில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதற்கான விற்பனையை எதிர்பார்த்து பல்லடம் பகுதி விவசாயிகள் கோழிக்கொண்டை பூக்கள் பயிரிட்டுள்ளனர்.
தூறல் மழை, பகலில் நல்ல வெயில் என சீதோஷ்ண நிலை கை கொடுப்பதால் பூச்செடிகள், நன்கு வளர்ந்துள்ளன. ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் கோழிக்கொண்டை சாகுபடி செய்ய ரூ.35ஆயிரம் வரை செலவாகும். இதில் ஏக்கருக்கு 500 கிலோ முதல் 600 கிலோ வரை பூக்கள் அறுவடை செய்யலாம். தற்சமயம் கிலோ ரூ.40 முதல் ரூ. 50 வரை விற்கும் கோழிக்கொண்டை பூக்கள் ஆயுதபூஜை சமயத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையாகும்.
லாபம் தரும் சாகுபடி
கோழிக்கொண்டைப்பூக்கள் சாகுபடி குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபம் தரும் என்பதால் இந்த கோழிக்கொண்டைப்பூ விவசாயத்தை ஆண்டு தோறும் ஆர்வமுடன் விவசாயிகள் செய்து வருகின்றனர். அறுவடைக்கு வந்த 4 மாதமும் பலன் தந்து தினசரி வருவாயை ஈட்டித் தரும்.
கோழிக்கொண்டைப்பூக்கள் சிவப்பு ஊதா ஆகிய நிறங்களில் செடிகளில் பூக்கும். இவை ரோஜா, சம்பங்கி, செண்டுமல்லி ஆகிய பூ மாலைகளுக்கு அழகு சேர்க்க கோழிக்கொண்டை பூக்கள் பயன்படுகிறது.
பல்லடம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்கொண்டைப்பூக்கள் திருப்பூர் மற்றும் கோவை பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
Related Tags :
Next Story