உர உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது
இணை உரங்களை உர உற்பத்தி நிறுவனங்கள் வாங்குவதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது என, திருப்பூர் மாவட்ட சில்லரை உர விற்பனையாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.
திருப்பூர்
இணை உரங்களை உர உற்பத்தி நிறுவனங்கள் வாங்குவதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது என, திருப்பூர் மாவட்ட சில்லரை உர விற்பனையாளர்கள் மனு கொடுத்துள்ளனர்.
உர விற்பனையாளர்கள் மனு
திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மனோகரிடம், திருப்பூர் மாவட்ட சில்லரை உர விற்பனையாளர்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது
விவசாயிகளின் அத்தியாவசிய தேவையான டி.ஏ.பி. யூரியா பொட்டாஷ் உரம் கொள்முதல் செய்யும் போது, மொத்த விற்பனையாளர்கள் எம்.ஆர்.பி. விலைக்கே பில் போடுவதால் நாங்கள் அதற்கு மேல் லாரி வாடகை, இறக்கு கூலி ஆகியவற்றை சேர்த்தால் எம்.ஆர்.பி. விலையை விட அதிகமாக நாங்கள் கொள்முதல் செய்யும் விலை ஆகிறது.
எம்.ஆர்.பிக்கு விற்பனை செய்யும் போது ஒவ்வொரு மூடைக்கும் நாங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.உர உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் மற்ற தயாரிப்புகளை எடுத்தால் தான் டி.ஏ.பி., யூரியா கொடுப்போம் என உர உற்பத்தி நிறுவனங்கள் திட்டவட்டமாக தெரிவிக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு டன் யூரியாவுடன் கட்டாய இணைப்பாக விவசாயிகள் விரும்பாத மற்றும் தேவைப்படாத இடுபொருட்களை வாங்குமாறு உர உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
கட்டாயப்படுத்தக்கூடாது
உர உற்பத்தி நிறுவனங்களும், மொத்த விற்பனையாளர்களும், சில்லரை விற்பனையாளர்களுக்கு இணை உரம் எடுக்க கட்டாயப்படுத்தக்கூடாது. எங்களுக்கு குறைந்தபட்ச லாபத்தை உறுதிப்படுத்த வேண்டும். தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இணை உரங்களை உர உற்பத்தி நிறுவனங்கள் எடுக்க கட்டாயப்படுத்தக்கூடாது.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
---------
படம் உள்ளது.
-----
Related Tags :
Next Story