தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைையை திறக்க கோரி கிரா மக்கள் கலெக்டர் அலுவலக்த்தில் மனு


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைையை  திறக்க கோரி கிரா மக்கள் கலெக்டர் அலுவலக்த்தில் மனு
x
தினத்தந்தி 27 Sept 2021 6:43 PM IST (Updated: 27 Sept 2021 6:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி கிராமங்களை சேர்ந்த மக்கள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
எங்கள் கிராமம் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எங்கள் கிராமத்தில் உள்ள 200 இளைஞர்கள் ஸ்டெர்லைட் ஆலை மூலமாக மறைமுக வேலை பெற்று வந்தனர். கடந்த 3½ ஆண்டுகளாக ஆலை மூடிக்கிடப்பதால் வேலை வாய்ப்பை இழந்த 200 இளைஞர்களும், அவர்களை சேர்ந்த குடும்பங்களும் பொருளாதார இழப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை மூடி கிடைப்பதால் அனைவரும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நோய்த்தடுப்பு மருத்துவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலின்போது எங்கள் கிராமத்துக்கு போதுமான உதவிகளை செய்தனர். எங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக விளங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க வேண்டும். எனவே ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Next Story