தூத்துக்குடியில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து ஆட்டோ டிரைவர்கள் தகவல் கொடுக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தல்


தூத்துக்குடியில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து  ஆட்டோ டிரைவர்கள் தகவல் கொடுக்க வேண்டும்  போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 27 Sept 2021 7:15 PM IST (Updated: 27 Sept 2021 7:15 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து ஆட்டோ டிரைவர்கள் தகவல் கொடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து ஆட்டோ டிரைவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தி உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடியில் நடந்த தனியார் பஸ், மினிபஸ், ஆட்டோ டிரைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:-
 நீங்கள் அனைவரும் போலீசாரை போன்று ஆங்காங்கே சுற்றிக் கொண்டு வருபவர்கள். உங்களுக்கு நகரில் நடக்கக்கூடிய அனைத்து சம்பவங்களும் தென்படும், அவ்வாறு தென்படும் பட்சத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவது தெரியவந்தாலோ, தங்களது வாகனங்களில் சந்தேகத்துக்கு இடமான வகையில் யாரேனும் பயணம் செய்வதாக இருந்தாலும், சட்டவிரோதமாக துப்பாக்கி, கத்தி, அரிவாள், கஞ்சா மற்றும் போதைப்பொருள் போன்றவற்றை எடுத்து செல்வதாக இருந்தாலோ போலீசாரின் அவசர இலவச தொலை பேசி எண்.100 அல்லது மாவட்ட போலீஸ்கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 95141 44100 என்ற எண்ணுக்கோ தகவல் அளிக்கலாம்.
டிரைவர்கள், கண்டக்டர்கள் மோட்டார் வாகன விதிமுறைகளை முழுவதுமாக கடைபிடிப்பதுடன் கண்டிப்பாக சீருடை அணிந்துதான் வாகனங்களை இயக்க வேண்டும். தனியார் வாகன டிரைவர்கள் தங்களது ஓட்டுனர் உரிமம், வாகன பதிவுச் சான்று போன்றவற்றை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். 
ஒலிபெருக்கிகள் கூடாது
வாகனத்தில் கண்டிப்பாக தொலைக் காட்சி பெட்டிகள், ஒலிபெருக்கிகள் வாயிலாக திரைப்படங்களோ, பாடல்களோ ஒளிபரப்பவோ, இசைக்கவோ கூடாது. முக்கியமாக சமுதாயம் சார்ந்த பாடல்களோ, படங்களோ கண்டிப்பாக இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.


Next Story