மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
பழனியில் 58 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆய்வு செய்தார்.
பழனி:
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் முதன்மையானதாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இந்த கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தங்குமிடங்கள், கழிப்பறைகள், பொருட்கள் வைப்பறை, முடிக்காணிக்கை மையங்கள், வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பழனிக்கு வருகிற பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்வதற்காக, கிழக்கு கிரிவீதியில் உள்ள சுற்றுலா பஸ் நிலையம் அருகே 58 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தித்தர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையிலான அதிகாரிகள் தேவஸ்தான் பூங்கா எதிர்புறம் உள்ள விவசாய நிலங்கள், சுற்றுலா பஸ் நிலையத்திற்கு செல்லும் இணைப்புச் சாலை அமைக்கப்பட உள்ள விவசாய நிலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது பழனி கோவில் துணை ஆணையர் செந்தில்குமார், தாசில்தார் சசிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story