இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வேடசந்தூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் மைனர்காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். அவருடைய மனைவி லலிதா. இந்த தம்பதியின் மகள் அனிதா (வயது 17). இவர், 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
நேற்று முன்தினம் மாலையில், ராமகிருஷ்ணனும், லலிதாவும் காய்கறி வாங்குவதற்காக வேடசந்தூர் சந்தைக்கு சென்று விட்டனர். பின்னர் அவர்கள் இரவில் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டில் உள்ள விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு அனிதா தற்கொலை செய்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story