தூத்துக்குடி விமான நிலையத்தில் உலக சுற்றுலா தினவிழா
தூத்துக்குடி விமான நிலையத்தில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையத்தில் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விமான பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு கொடுக்கப்பட்டது.
சுற்றுலா தினம்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு 'சுற்றுலாவும், அதன் உள்ளடங்கிய வளர்ச்சியும்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் உலக சுற்றுலா தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு விமான நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள், முகக்கவசம், சானிடைசர் மற்றும் சுற்றுலா கையேடு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை விமான நிலைய இயக்குனர் ந.சுப்பிரமணியன் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் விமான நிலைய மேலாளர் ஜெயராமன், விமான நிலைய பணியாளர்கள், விமான நிலைய பாதுகாப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், பேராசிரியர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் க.சீனிவாசன் நன்றி கூறினார்.
தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் தூய்மையே சேவை வாரத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
--------------
Related Tags :
Next Story