சாலையோரத்தில் கொட்டப்பட்ட ரேஷன் அரிசி
சாலையோரத்தில் ரேஷன் அரிசி கொட்டப்பட்டதால் வேடசந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர்:
வேடசந்தூரில், மாரம்பாடி செல்லும் வழியில் பேரூராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது. அதன் சுற்றுச்சுவர் அருகே, சாலையோரத்தில் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் ரேஷன் அரிசியை கொட்டி சென்றார். அது, 100 கிலோ வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.
ரேஷன் கடையில் வாங்கிய அரிசி பிடிக்கவில்லை என்றால், அப்பகுதியில் உள்ள எழை-எளிய மக்களுக்கு கொடுத்திருக்கலாம். அதற்கு பதிலாக யாருக்கும் பயன்படாத வகையில், ரேஷன் அரிசியை சாலையோரத்தில் கொட்டி சென்ற சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வட்ட வழங்கல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story