சங்கராபுரத்தில் நாய்க் குட்டி சித்ரவதை வாலிபர் கைது
சங்கராபுரத்தில் நாய்க் குட்டி சித்ரவதை வாலிபர் கைது
சங்கராபுரம்
சங்கராபுரம் நகரம், கம்மாளர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் நாகராஜன்(வயது 40). அதே ஊரில் நகைக்கடை நடத்தி வரும் இவர் ராஜபாளையம் நாய்க் குட்டி ஒன்றை ரூ.60 ஆயிரத்துக்கு வாங்கி வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அந்த நாய்க் குட்டி திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் பல்வேறு இடங்களில் நாய்க்குட்டியை தேடி அலைந்தார்.
அப்போது மையனூர் கிராமத்தை சேர்ந்த பவுல்ராஜ் மகன் பியோ(19) என்பவர் நாய்க் குட்டியை வைத்திருப்பது தெரியவந்தது. உடனே நாகராஜன் அங்கு சென்று பார்த்தபோது நாய்குட்டியின் காது, வால் அறுக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதை தட்டிக்கேட்டபோது ஆத்திரமடைந்த பியோ நாகராஜனை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
பின்னர் இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குபதிவு செய்து பியோவை கைது செய்ததோடு அவரிடம் இருந்த நாய்க்குட்டியையும் மீட்டு நாகராஜனிடம் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story