மிஸ்டு காலால் ஏற்பட்ட காதல் பிளஸ்1 மாணவிக்கு திருமணம் சிறுவன், பெற்றோர்கள் மீது வழக்கு
மிஸ்டு காலால் ஏற்பட்ட காதலால் பிளஸ் 1 மாணவிக்கு திருமணம் செய்த சிறுவன் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பென்னாகரம்:
பென்னாகரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். தந்தை பெங்களூருவில் கட்டிட வேலை செய்து வருகிறார். தாயார் பென்னாகரத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் சிறுமியின் தாயார் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்துள்ளது. அந்த எண்ணை சிறுமி தொடர்பு கொண்டு பேசியபோது நல்லம்பள்ளியை சேர்ந்த 17 வயது சிறுவன் மிஸ்டு கால் கொடுத்து இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமியும், சிறுவனும் செல்போனில் அடிக்கடி பேசி காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் குறித்து பெற்றோருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் அத்திமரத்தூர் கோவிலில் அவர்களுக்கு இருவரது பெற்றோரும் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான அன்றே சிறுமி பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டாள். இருப்பினும் சிறுவனுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை, சிறுவன் தனது வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளான். பிளஸ்-1 மாணவிக்கு திருமணம் செய்து வைத்தது குறித்து பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுவன் மற்றும் இருவரின் பெற்றோர் என 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story