மதம் மாறியவர் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


மதம் மாறியவர் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 Sept 2021 11:09 PM IST (Updated: 27 Sept 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

மதம் மாறியவர் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த சம்பந்திகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 80). இவர் நேற்று முன்தினம் மாலை வயது முதிர்வின் காரணமாக இறந்து விட்டார். அவரது உடல் நேற்று காலை 11 மணியளவில் அதே கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயன்படுத்திவரும் சுடுகாட்டில் புதைப்பதற்காக எடுத்துச் சென்றனர். 
ஆனால் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறி உள்ளார்.

 இதனால் அவருடைய உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறிந்த வாணியம்பாடி தாலு்கா போலீசார், மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் தொடர்ந்து இரவு 7 மணி வரையில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இதனால் அங்குள்ள ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். 


Next Story