தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
பரமக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்,
பரமக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்தவர் மரிய சூசை என்ற திரவியம் மகன் பாக்கியராஜ் (வயது52). கூலித் தொழிலாளியான இவர் 11 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தபோது ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றாராம். பின்னர் வீட்டிற்குள் வைத்து கைகால்களை கட்டிவைத்து பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் விரைவு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்ரா சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாக்கியராஜ்க்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்டதவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story