எந்திரம் மீது மோதி ஒருவர் பலி


எந்திரம் மீது மோதி ஒருவர் பலி
x
தினத்தந்தி 27 Sept 2021 11:25 PM IST (Updated: 27 Sept 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

எந்திரம் மீது மோதி ஒருவர் பலியானார்.

மானாமதுரை,
திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கபாண்டி, பெரியசாமி. இவர்கள்  சிவகங்கையில் இருந்து ஆவரங்காடு கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தபோது  சாலையில் நின்று கொண்டிருந்த ஜே.சி.பி. எந்திரம் மீது மோதியதில் தங்கபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். 
உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரியசாமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
விபத்துகுறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story