பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி மாணவ,மாணவிகள் சாலை மறியல்
ஆயல் ஆதிதிராவிடர் பள்ளி வளாகத்தில் முழங்கால் அளவுக்கு தேங்கி நின்ற மழைநீரை அகற்றக்கோரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சோளிங்கர்
ஆயல் ஆதிதிராவிடர் பள்ளி வளாகத்தில் முழங்கால் அளவுக்கு தேங்கி நின்ற மழைநீரை அகற்றக்கோரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஆயல் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி உள்ளது. அதில் 175 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். சமீபத்தில் ெபய்த மழையால் பள்ளி வளாகத்தில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது.
பள்ளியைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு ெசய்து வீடுகளை கட்டியிருப்பதாலும், கால்வாய் தூர்ந்துபோய் இருப்பதாலும் தேங்கி நிற்கும் மழைநீர் வடிய வழியில்லை. மழைநீர் ஒரே இடத்தில் தேங்கி கிடப்பதால் துா்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி மாணவ-மாணவிகள் நேற்று சோளிங்கர்-பாணாவரம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
மழைநீரை வடிய வைத்தனர்
தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, தாசில்தார் வெற்றிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் ஆகியோர் விரைந்து வந்து மாணவ-மாணவிகளிடம் பேசி, மழைநீர் வடிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் சாலை மறியலை ைகவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
அதைத்தொடர்ந்து தாசில்தார் வெற்றி குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் ஆகியோர் ஆகியோர் ஆலோசனை நடத்தி, பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற வடிகால்வாயை ஆய்வு செய்தனர். ஒரு பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து தற்காலிகமாக கால்வாைய தூர்வாரி பள்ளி வளாகத்தில் இருந்து தேங்கி நின்ற மழைநீரை வடிய வைத்தனர். பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது வருவாய் ஆய்வாளர் சுபாஷினி, ஊராட்சி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அதிகாரிகளுக்கு நன்றி
பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், இதுகுறித்து 10 ஆண்டுகளாக உயர்அதிகாரிகளுக்கு தெரிவித்தும், மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தற்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்றியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
Related Tags :
Next Story