குளித்தலையில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது; 7 பேருக்கு வலைவீச்சு


குளித்தலையில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது; 7 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Sept 2021 1:00 AM IST (Updated: 28 Sept 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேைர போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 7 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

குளித்தலை,
ரகசிய தகவல்
குளித்தலை பெரியபாலம் பகுதியில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
அப்போது காவிரி ஆற்றுப்பகுதியில் சிலர் சாக்கு மூட்டைகளில் மணலை கட்டிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
7 பேருக்கு வலைவீச்சு
இருப்பினும் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்த வாசு (வயது 26), சின்ராசு (30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய மலையப்ப நகரை சேர்ந்த சுரேஷ், சிவா, விக்னேஷ், பாட்சா, செல்லப்பன், சரவணன், குமார் ஆகிய 7 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், மணல் திருட்டுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 10 மணல் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story