கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திசையன்விளை அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே மன்னார்புரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் வள்ளிமயில். இவருடைய மகன் சஞ்சய் (வயது 18), தெற்கு விஜயநாராயணத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் கேம் விளையாடியுள்ளார். எனவே அவரை தாயார் கண்டித்தார்.
இதனால் மனமுடைந்த சஞ்சய் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் திடீரென்று துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story