ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு
ஏழாயிரம் பண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணைக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. வந்தார். பின்னர் அவர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ஆஸ்பத்திரியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். ஏழாயிரம் பண்ணை மெயின் ரோட்டில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அலுவலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆய்வின் போது வெம்பக்கோட்டை கிழக்கு வட்டார தலைவர் காளியப்பன், சிவசங்கு பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சுப்புராம், ரெட்டியபட்டி கிராம கமிட்டி தலைவர் வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story