தேசிய சிலம்ப போட்டியில் கலந்து கொள்ள உதவ வேண்டும்
தேசிய சிலம்ப போட்டியில் கலந்து கொள்ள உதவ வேண்டும் என கலெக்டரிடம் மாணவர்கள் மனு அளித்தனர்.
விருதுநகர்,
விருதுநகரை சேர்ந்த மாணவர்கள் ராகுல், ஹரிஷ் பாண்டி, மாணவி தீட்சிதா ஆகியோர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் கடந்த 7 ஆண்டுகளாக மோகன் என்ற சிலம்ப பயிற்சியாளரிடம் சிலம்பபயிற்சி பெற்று வந்தோம். அவரது மறைவுக்கு பின்பு பிற அணிகளுடன் இணைந்து போட்டிகளில் கலந்து கொள்கிறோம். இந்நிலையில் சமீபத்தில் நேபாளத்தில் நடந்த சர்வதேச சிலம்பப் போட்டியில் 3 பேரும் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ள நிலையில் வருகிற நவம்பர் மாதம் 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடை பெற உள்ள தேசிய சிலம்ப போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். எங்களது பொருளாதார நிலை அதற்கு இடம் கொடுக்காத நிலை உள்ளதால் தாங்கள் அன்பு கூர்ந்து தேசிய சிலம்ப போட்டியில் கலந்து கொள்ள எங்களுக்கு உதவிட வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story