இளம்பெண் தற்கொலை
புளியங்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே நெற்கட்டும்ெசவல் அரண்மனை தெருவை சேர்ந்தவர் சிவகுமாரசாமிதுரை (வயது 27). அதே பகுதி நடுத்தெருவை சேர்ந்த முருகன் மகள் சிவரம்யா (23). இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் தென்காசி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story