படுக்கையில் மர்மமாக இறந்து கிடந்த பெண்


படுக்கையில் மர்மமாக இறந்து கிடந்த பெண்
x
தினத்தந்தி 28 Sept 2021 2:06 AM IST (Updated: 28 Sept 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் படுக்கையில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திருச்சி
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் வில்வ நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது 29). கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் இவர்களுக்கு திருமணம் ஆனது. இத்தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் இரவு 9 மணிக்கு சாப்பிட்டுவிட்டு பரமேஸ்வரி தூங்கச் சென்றார். மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு பிரபாகரன் எழுந்து மனைவியிடம் குடிக்க தண்ணீர் கேட்டு தட்டி எழுப்பினார். நீண்டநேரம் ஆகியும் பரமேஸ்வரி எழுந்திருக்கவில்லை. படுக்கையிலேேய இறந்து விட்டது தெரியவந்தது. அவரது மர்ம சாவு குறித்து பரமேஸ்வரியின் தந்தை ரமேஷ், கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம் வழக்கு பதிந்து, பரமேஸ்வரியின் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.




Next Story