பஸ்சை மறித்து டிரைவரை தாக்கியவர் கைது
பஸ் டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் சம்பவத்தன்று இரவு ஜெயங்கொண்டத்தில் இருந்து அணைக்கரையை நோக்கி அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை டிரைவர் தஞ்சை மாவட்டம் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்(வயது 55) ஓட்டினார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பஸ்சை மறித்து வாகனத்தை நிறுத்தினார். இதையடுத்து அவரிடம், வாகனத்தை ஓரமாக நிறுத்தும்படி டிரைவர் சிவக்குமார் கூறியுள்ளார். அப்போது அவர், டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சிவக்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், டிரைவரை தாக்கியவர் ஜெயங்கொண்டம் சிதம்பரம் ரோட்டுத் தெருவில் வசிக்கும் பஷீரின் மகன் பகுருதீன்(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து பகுருதீனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story