மாவட்ட செய்திகள்

பெண் தற்கொலை செய்ததாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக தாங்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பெண்ணை தாயும், பெரியப்பாவும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலையை மறைத்த தந்தையும் போலீசில் சிக்கினார். + "||" + Sudden twist in the case where the woman allegedly committed suicide

பெண் தற்கொலை செய்ததாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக தாங்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பெண்ணை தாயும், பெரியப்பாவும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலையை மறைத்த தந்தையும் போலீசில் சிக்கினார்.

பெண் தற்கொலை செய்ததாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக தாங்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பெண்ணை தாயும், பெரியப்பாவும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலையை மறைத்த தந்தையும் போலீசில் சிக்கினார்.
பெண் தற்கொலை செய்ததாக கூறிய வழக்கில் திடீர் திருப்பமாக தாங்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பெண்ணை தாயும், பெரியப்பாவும் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலையை மறைத்த தந்தையும் போலீசில் சிக்கினார்.
சிக்பள்ளாப்பூர்:

மதம் மாறி திருமணம்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் அருகே முசல்மானரஹள்ளியை சேர்ந்தவர் பயாஸ். இவரது மகள் பர்வீனா பானு. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் இதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். ஆனால், பர்வீனா பானு திருமணமான அடுத்த நாளே பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர், பர்வீனா பானு மணிவாளா கிராமத்தை சேர்ந்த சிவப்பா என்பருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. 

அப்போது பர்வீனா பானு மதம் மாறி தனது பெயரை ஷில்பா என்று மாற்றிக்கொண்டார். திருமணமான சில மாதங்கள் கழித்து சிவப்பா உடல் நலக்குறைவு காரணமாக இறந்து போனார். கணவர் சிவப்பா இறந்த பிறகு பர்வீனா பானு பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். பர்வீனா பானு, கவுரிபிதனூர் கிராமத்தில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தபோது, விஜய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

கிணற்றில் பிணமாக கிடந்தார்

அவர்கள் 2 பேரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் விஜயும் சாலை விபத்தில் பலியானார். இதனால் ஆயத்த ஆடை நிறுவனத்தில் ேவலை செய்யும் ஊழியர்கள் பர்வீனா பானுவுடன் சேர்ந்து வாழும் அனைவரும் இறந்து விடுகின்றனர் என்று விமர்சனம் செய்தனர். இதனால் பர்வீனா பானு மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிைலயில் கடந்த 5-ந் தேதி கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் பர்வீனா பானு பிணமாக கிடந்தார். அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கவுரிபிதனூர் புறநகர் போலீசார் விரைந்து வந்து பர்வீனா பானுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு பர்வீனா பானுவின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர். இதனால் போலீசாரே பர்வீனா பானுவின் உடலை அடக்கம் செய்தனர். 

திடுக்கிடும் தகவல்கள்

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பர்வீனா பானுவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் பர்வீனா பானு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் பர்வீனா பானுவின் தந்தை பயாஸ், தாயார் குல்மாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. 
அதாவது சம்பவத்தன்று பர்வீனா பானு, பெற்றோரை காண மாந்தோப்பிற்கு சென்றுள்ளார். 

அப்போது தாய் குல்மாரும், பெரியப்பா பைரோஸ்கானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் இருவரும் தங்களுக்கு சொந்தமான மாந்தோப்பில் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். அதுபோல் சம்பவத்தன்றும் அவர்கள் மாந்தோப்பில் உல்லாசமாக இருந்துள்ளனர். 
உல்லாசமாக இருந்ததை...

அப்போது அங்கு வந்த பர்வீனா பானு, தாயும், பெரியப்பாவும் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் கள்ளத் தொடர்பு வெளியே தெரிந்துவிடும் என்று நினைத்த தாய் குல்மாரும், பைரோஸ்கானும் சேர்ந்து பர்வீனா பானுவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அப்போது குல்மாரின் கணவர் பயாஸ் அங்கு வந்துள்ளார். அவரிடம் குல்மாரும், பைரோஸ்கானும் மதம் மாறியதை தட்டிக்கேட்டதால் எங்களை தாக்கியதால் பர்வீனா பானுவை திருப்பி அடித்தோம். இதில் பர்வீனா பானு இறந்துவிட்டாள் என்று அவர்கள் கூறியுள்ளனர். 

ஏற்கனவே மகள் மதம் மாறியதால் பர்வீனா பானு மீது வெறுப்பில் இருந்த பயாஸ் குல்மார்- பைரோஸ்கான் கூறியதை உண்மை என்று நம்பினார். 
இதனால் கொலையை மறைக்க அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து பர்வீனா பானுவின் உடலை கிணற்றில் தூக்கிப்போட்டுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது. போலீஸ் விசாரணைக்கு பிறகே பயாஸ் தனது மனைவிக்கும், அண்ணன் பைரோஸ்கானுக்கும் கள்ளத்தொடர்பு இருந்த விவகாரம் தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.  

3 பேர் கைது

இதையடுத்து குல்மார், பயாஸ், பைரோஸ்கான் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.